ஈசநத்தம்
ஈசநத்தம் உங்களை வரவேற்கிறது
பழமையான வரலாற்றுச் சிறப்பும் விவசாய செழிப்பும் கொண்ட கிராமம்
வரலாறு மற்றும் பாரம்பரியம்
300 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான 'ஈசநத்தி ஈஸ்வரன்' (சிவன்) கோவிலின் பெயரிலிருந்தே இக்கிராமத்திற்கு ஈசநத்தம் என்ற பெயர் வந்ததாக நம்பப்படுகிறது.
கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி வட்டத்தில் அமைந்துள்ள இக்கிராமம், வேடசந்தூர் மற்றும் தாந்தோணி வட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது.

சமூகம் மற்றும் வாழ்வாதாரம்
விவசாயமே ஈசநத்தத்தின் முக்கிய வாழ்வாதாரமாகும். குறிப்பாக, முருங்கை விவசாயம் மற்றும் ஏற்றுமதியில் ஈசநத்தம் மாநில அளவில் புகழ்பெற்று விளங்குகிறது.
ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் ஒருங்கிணைந்த சமூகத்தைக் கொண்ட ஈசநத்தம், அதிக பாலின விகிதத்தையும் படித்து முன்னேறும் மக்களையும் கொண்ட கிராமமாகும்.


